பொன்னான வாக்கு – 26

குப்புசாமி குப்புசாமி என்று ஒரு பிரகஸ்பதி இருந்தார். அவருக்கு செஞ்சுலச்சுமி என்றொரு புத்திரி. இந்த செஞ்சுலச்சுமி ஒரு அதிரூப அழகு சுந்தரி. பிராந்தியத்தில் அவளைப் பார்த்து வழியாத வயசுப் பையன்களே கிடையாது. ஆனால் செஞ்சுலச்சுமி யாருக்காவது மசிவாளா என்றால் மாட்டாள்! நூற்றுக் கணக்கான காதல் கடுதாசிகள், ஆயிரக்கணக்கான குறுந்தகவல் கும்மியடிப்புகள், கணக்கு வழக்கே இல்லாத நேரடி அப்ளிகேஷன்கள். ம்ஹும். செஞ்சுலச்சுமிக்கு எந்தப் பயலையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் செஞ்சுலச்சுமி வெறும் அழகி மட்டுமல்ல. கொஞ்சம் வெல்லம் போட்ட அழகி. … Continue reading பொன்னான வாக்கு – 26